Advertisment

போயஸ் கார்டன் புது வீட்டில் நயன்தாரா: அவரே பகிர்ந்த ஸ்பெஷல் போட்டோஸ்

நயன்தாரா போயஸ்கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் திரிஷா ஆகியோர் இப்பகுதியில்தான் வசிக்கின்றனர். புதிய வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nayanthara Vignesh Shivan Mm

கணவர், குழந்தைகளுடன் நயன்தாரா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹரி டைரக்ஷனில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. இவர் கடைசியாக அன்னப்பூரணி என்ற படத்தில் நடித்தார். அவரின் 75வது படமாக இப்படம் சர்ச்சைக்குள் சிக்கி தோல்வி படமாக முடிந்துவிட்டது.

Advertisment

அதன்பின்னர் அவர் நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை. அவரின் கைவசம் மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் நயன்தாரா போயஸ்கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் திரிஷா ஆகியோர் இந்தப் பகுதியில்தான் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் தான் வசிக்கும் வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரு மகன்கள் உள்ளன. நயன்தாரா, சினிமா தவிர 9 ஸ்கின் என்ற நிறுவனத்தையும், நாப்கின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதற்கிடையில், கேரளத்தில் அபார்ட்மெண்ட் ஒன்றை கட்டி வாடகைக்கு விடும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment