நடிகை நயன்தாரா சாலையோர குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
ஐயா படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் யாரடி நீ மோகினி, சத்தியம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார். ஆரம்ப காலத்தில் தொடர்ந்து நடித்தி வந்தாலும். கிட்டதட்ட 2 வருடங்கள் அவர் படம் ஏதும் நடிக்கவில்லை. தனிப்பட்ட ரீதியாக அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

சிறிய காலத்திற்கு பிறகு விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் நானும் ரவுடி படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறும் அவளவிற்கு அவரது படங்கள் வெற்றிபெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்தார். இது சர்ச்சையானது. ஆனால் அந்த சர்ச்சகைகளை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் அவரது கனெக்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சென்னையில் எழுப்பூர் ரயில் நிலையத்தில் சாலையோரத்தில் உள்ள குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.