/indian-express-tamil/media/media_files/HTchsaTBlqW4jwofKup4.jpg)
Vignesh Shivan birthday
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இன்று (செப்.18) 39வது பிறந்த நாள்.
இதை முன்னிட்டு நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு, முத்த மழை பொழிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
எனது எல்லாமுமாக இருக்கும் உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நான் உன்மீது வைத்துள்ள காதலை என்னால், வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. கடவுள் எப்போதும் உன் வாழ்க்கையில் எல்லாமும் கிடைக்க ஆசிர்வதிப்பார், நமது குழந்தைகளான உயிர் உலக்-ஐப் போல.. என்று அதில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் நடந்த சைமா விருதுக்காக துபாய் சென்றிருந்தனர். இப்போது இருவரும் துபாயில் தான் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.
தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, யோகிபாபு உடன் மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய 6-வது படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அப்படத்தில் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தை நயன்தாரா தான் தயாரித்து உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.