Advertisment

அஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

இந்த கேள்விக்கு நடிகை நயன் சற்றும் யோசிக்காமல் அளிக்கும் ஒரே பதில் ’.தல’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

பொதுவாக டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் பிரபலங்களிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி என்னவென்று பார்த்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார்? என்பது தான் அதிலையும் விஜய், அஜித் என்று இரண்டு தேர்வுகளை கொடுத்து இதில் உங்களுக்கு பிடித்தவர்கள் யார்? என்ற கேள்வியும் கேட்கப்படும்.

Advertisment

இந்த கேள்வியை நடிகை நயன்தாரா அதிகமுறை சந்தித்தது உண்டு.விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடங்கி,பேட்டிகள், டிவி ஷோக்கள் என பல இடங்களில் இந்த கேள்விக்கு நடிகை நயன் சற்றும் யோசிக்காமல் அளிக்கும் ஒரே பதில் ’.தல’. நடிகர் அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பலமுறை கூறியுள்ளார்.

அதை மிண்டும் ஒருமுறை உறுதி செய்தது போல் தற்போது ஒரு காரியத்தை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நயன்தாரா குறிப்பிட்ட சில படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒருபக்கம் அறம், டோரா, மாயா போன்ற பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களை தேர்வு செய்து அதில் கவனம் காட்டுகிறார்.

இல்லையென்றால் புதுமுக நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஹீரோ யாராக இருந்தாலும் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இந்த பழக்கத்தை தல அஜித்திற்காக மட்டும் சற்று மாற்றி கையாண்டுள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’விஸ்வாசம்’ திரைப்படம் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் 4 ஆவது முறையாக நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த படத்தில் நயனை நடிக்க வைக்க சிவா அவரை அணுகிய போது, நயன்தாரா அவரின் கேட்ட முதல் கேள்வி ஹீரோ யார்? என்பது தானாம். தல அஜித் என்ற பதில் கிடைத்ததும் கதை, சம்பளம் எதைப்பற்றியும் கேட்காமல் நயன்தாரா உடனே ஓகே சொல்லி இருக்கிறார். இந்த தகவல் இரண்டு நாட்களாக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறார். தல ரசிகர்கள் பலரும் இந்த செய்தியைக் கேட்டு நயன் தாராவை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். நடிகை என்பதை தாண்டி நானும் அஜித்தின் ரசிகை தான் என்பதை நயன் மீண்டும் உரக்க சொல்லியுள்ளார் என்று தல ரசிகர்கள் ஆர்ப்பரித்துள்ளனர்.

Ajith Nayanthara Viswasam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment