Thalaivar 168 : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதனை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.
Budget 2020 Live Updates : வள்ளுவர் குறளை எடுத்துரைத்த நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், தர்பாரில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா மீண்டும் தலைவர் 168-ல் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதோடு, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ் மற்றும் சூரி தலைவர் 168 படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.
தலைவர் 168 படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் முதன் முறையாக ரஜினிகாந்த்துடன் பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தின் தலைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போன முறை பிங்க் சேலை, இந்த முறை மங்களகரமான மஞ்சள் நிறம் – நிர்மலா சீதாராமன் படத் தொகுப்பு
தவிர, ’தலைவர் 168’ ரஜினியுடன் நயன்தாரா நடிக்கும் 5-வது படம். அதுவும் தர்பாருக்கு பிறகு, ரஜினியின் அடுத்தப் படத்திலேயே அவர் இணைந்திருப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. அதே ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்ட கருத்துகளில் சிலவற்றை இங்கே பகிர்கிறோம்.
அனைத்துத் தலைமுறைக்கும் பிடித்தபடி தலைவர் 168 இருக்கும் என இவர் பதிவிட்டுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
நல்ல கிராமத்துக் கதையை எதிர்பார்க்கிறோம் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.