/tamil-ie/media/media_files/uploads/2018/07/nayanthara.jpg)
nayanthara
Nayanthara : நடிகை நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதில் பாலாஜியோடு இணைந்து என்.ஜே.சரவணன் என்பவரும் இயக்குநர் பொறுப்பை பகிர்ந்துக் கொள்கிறார். இந்தப் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் அம்மனாக நடிக்கும் நயன்தாரா, இந்தப் படத்திற்காக சைவத்துக்கு மாறி உள்ளதாகவும், விரதம் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் படபிடிப்பு, சில வாரங்களுக்கு முன்பு கன்னியாக்குமரியில் தொடங்கியது. இந்நிலையில் தற்போது இதன் படபிடிப்பில் நயன்தாரா கலந்துக் கொண்டுள்ளார். இதற்காக நேற்று கன்னியாகுமாரி வந்த இவர், அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அதன் பின்னர் விரதமும் இருந்தார். அப்போது நயன்தாராவுடன், விக்னேஷ் சிவனும் உடனிருந்தார்.
நயன்தாராவின் வருகையால், பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி கும்பிட்டு விட்டு, வெளியில் வர முடியாமல் தவித்தார் நயன்தாரா. பின்னர் அங்கு வந்த போலீஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.