New Update
/indian-express-tamil/media/media_files/vsOJl4RLwnP6w97LrdaY.jpg)
லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்ற நயன்தாரா; முன்பு அளித்த பேட்டியை இணைத்து வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்
லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்ற நயன்தாரா; முன்பு அளித்த பேட்டியை இணைத்து வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகை நயன்தாரா தெரிவித்த இருவேறு கருத்துக்களை இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத்திலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இந்தியிலும் நயன்தாரா கால் பதித்தார். ஷாரூக்கான் உடன் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் இந்தியாவில் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஜவான் படத்தை தொடர்ந்து இந்தியிலும் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.
மேலும், தென்னிந்தியாவில் கமலை தவிர்த்து மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார் நயன்தாரா. கமர்ஷியல் படங்களுடன் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கும் நயன்தாரா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
தொடர்ச்சியான ஹிட் படங்களால் ரசிகர்கள் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். அவரும், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, நெற்றிக் கண் உள்ளிட்ட படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியை பயன்படுத்திக் கொண்டார்.
இந்தநிலையில், சமீபத்தில் நயன்தாரா, ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தனது அன்னபூரணி படத்தின் புரொமோஷனுக்காக பேட்டி அளித்திருந்தார். அப்போது “லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள், அதைச் சொன்னாலே என்னைத் திட்டுகிறார்கள். இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா அல்லது பெண் என்ற காரணத்தினால் அது இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என 10 பேர் பெருமையாக சந்தோஷமாக சொல்கிறார்கள் என்றால் 50 பேர் திட்டுகிறார்கள். நான் செய்ய விரும்பும் கதைகள் எதுவும் அந்த பட்டத்திற்காக கிடையாது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் அன்புக்காகத் தான் அதை எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
Idhu ulaga maga nadippu da saami 😂 #Nayanthara pic.twitter.com/QJE7iuidSw
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) December 11, 2023
இந்நிலையில் நயன்தாரா முன்பு அளித்த பேட்டியையும், சமீபத்திய பேட்டியையும் இணைத்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.