சென்னை மேயர் பிரியாவுடன் நயன்தாரா: திடீர் சந்திப்பு எங்கே தெரியுமா?
சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை நயன்தாரா, மேயர் பிரியா ராஜன் சந்தித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை நயன்தாரா, மேயர் பிரியா ராஜன் சந்தித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara met Chennai Mayor Priya Rajan at kalikambal temple
கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார். சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம்’ மலையாள சினிமாவில், நயன்தாரா அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியாக உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து’ ஒரு ராணி போல இப்போது திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன்’ சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisements
சமீபத்தில் சென்னை மேயராக பொறுப்பேற்ற பிரியா ராஜன்’ சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில், நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதேநேரம்’ நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் அந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர்.
சாமி தரிசனம் முடிந்ததும், கோயிலில் இருந்த மேயர் பிரியா ராஜனை நயன்தாரா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு, நயன்தாரா கோயிலில் இருந்து கிளம்பினார்.
நயன்தாரா, விக்கி கூட்டணியில் அடுத்த படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.
முன்னதாக’ நயன்தாராவும், விக்கியும்’ புதிய கார் வாங்கிய நிலையில், பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “