/tamil-ie/media/media_files/uploads/2018/11/Nayanthara-name-in-viswasam.jpg)
Nayanthara name in viswasam, நயன்தாரா
viswasam : விஸ்வாசம் படத்தில் தல அஜித் பெயர் தூக்குத்துரை என்று தெரியாத தல ரசிகர்களே இல்லை... அதே படத்தில் நயன்தாரா பெயரும் இப்போது வெளியாகியுள்ளது.
2007 ம் ஆண்டு நடிகர் அஜித் டபுள் ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் நடித்த படம் பில்லா. அதன் பிறகு, மீண்டும் இரட்டை வேடத்தில் அவர் நடித்து வரும் படம் தான் விஸ்வாசம். 2007ம் ஆண்டு பில்லா, 2008ம் ஆண்டு ஏகன் மற்றும் 2013ம் ஆண்டு ஆரம்பம் படங்களில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் நயன்.
விஸ்வாசம் படத்தின் நயன்தாரா பெயர்
இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தில் தூக்குத்துரை என்ற கதாப்பாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். இருப்பினும் இரட்டை வேடங்களில் பெரியவர் கதாப்பாத்திரத்திற்கே தூக்குத்துரை என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சின்ன தல பெயர் ரகசியம் வெளிவரவில்லை.
ஆனால் சின்ன தல ஜோடியாக நடிக்கும் நயன் பெயரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் அவருக்கு “நிரஞ்சனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஜித்துடன் இணைந்து நிற்பது போல் இருக்கும் புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் கதாப்பாத்திரத்தின் பெயரும் வெளியானது.
November 2018#Nayanthara plays a powerful character in #Viswasam - Her Character name is #Niranjana
Her 4th movie with #Thala#Ajithpic.twitter.com/l3d3zVViHZ
— Ramesh Bala (@rameshlaus)
#Nayanthara plays a powerful character in #Viswasam - Her Character name is #Niranjana
— Ramesh Bala (@rameshlaus) November 29, 2018
Her 4th movie with #Thala#Ajithpic.twitter.com/l3d3zVViHZ
நானும் ரவுடி தான் படத்தின் காதுமா அடுத்ததாக விஸ்வாசம் படத்தின் நிரஞ்சனா தான் சமூக வலைத்தளத்தின் வைரல் டாக்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.