Advertisment

’சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள்’ பட்டியலில் நயன்தாரா; விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்

பிஸினஸ் டுடே சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் நயன்தாரா; கணவர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார் லேடி சூப்பர் ஸ்டார்

author-image
WebDesk
New Update
Nayanthara

நயன்தாரா (இன்ஸ்டாகிராம்)

லேடி சூப்பர் ஸ்டார்என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, பிசினஸ் டுடே பத்திரிகையின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜோயா அக்தர், செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா மாதாபி பூரி புச் மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழும நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி ஆகிய மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் நடிகை நயன்தாராவின் பெயரும் இடம்பெற்று உள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Nayanthara named one of the ‘Most Powerful Women in Business’: Actress thanks husband Vignesh Shivan

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார், மேலும் தனது கனவை பெரிதாக்கிய கணவர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்தார். நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நன்றி. பெரிய கனவு காண எனக்குக் கற்றுக் கொடுத்த என் அன்பான கணவர் விக்னேஷ் சிவனுக்கு (@wikkiofficial) நன்றி. இந்த மரியாதைக்கு பிஸினஸ் டுடே-க்கு (@business_today) நன்றி!!” என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா நடிப்பு மட்டுமின்றி, ரவுடி பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், நெற்றிக்கண் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். நயன்தாரா தனது அழகுசாதன பிராண்டையும் 9 ஸ்கின் என்ற பெயரில் தொடங்கினார். லிப் பாம் நிறுவனமும் நயன்தாராவின் மற்றொரு முயற்சியாகும். ஃபெமி என்ற பெயரில் சானிட்டரி பேட் நிறுவனத்தையும் நயன்தாரா தொடங்கினார்.

பிசினஸ் டுடேயிடம் பேசிய நயன்தாரா, பணம் சம்பாதிப்பதை விட, மக்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது எனக்கு ரொம்ப முக்கியமான விஷயம் என்று கூறினார். "ஆம், நாங்கள் பிஸினஸில் பணம் சம்பாதிக்கிறோம், ஆனால் அது மக்களுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்," என்று நயன்தாரா மேற்கோள் காட்டினார். தனது தொழில் முயற்சிகளில் விக்னேஷ் சிவனின் பங்கைப் பற்றி பேசுகையில், விக்னேஷ் சிவன் வணிக வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்வதாக கூறினார். எங்களின் ஒப்புதலின்றி எங்களின் பிராண்டிலிருந்து எதுவும் வெளியேறாது, ஏனெனில் நாங்கள் தரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றும் நயன்தாரா கூறினார்.

நடிப்பில், நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார், இந்தப் படம் நடுநிலையான வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக டெஸ்ட் மற்றும் 1960ல் இருந்து மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment