Nayanthara, nayanthara news, nayanthara movie teaser, love action drama, nivin pauly, malayalam, onam நயன்தாரா, நயன்தாரா பட டீசர், லவ் ஆக்ஷன் டிராமா, நிவின் பாலி, மலையாளம், ஓணம்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, மம்முட்டி உடனான புதிய நியமம் படத்தை அடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் அறிமுக இயக்குனர் தியான் சீனிவாசனின் இயக்கத்தில் மசாலா எண்டர்டெயினராக உருவாகியுள்ள லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடித்துள்ளார்.
Advertisment
மலையாள இயக்குனர் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து மூத்த மகன் வினீத் இயக்குனராகியிருந்த நிலையில், தற்போது இளைய மகன் தியான் சீனிவாசனும், லவ் ஆக்ஷன் டிராமா படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். நிவின் பாலி முதன்முறையாக நயன்தாரா உடன் இணைந்து நடித்துள்ளார். நிவின் நண்பனாக வரும் அஜூ வர்கீஸ், இந்த படத்திலும் அவரின் நண்பனாக நடித்துள்ளதோடு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
கொஞ்சம் ரொமான்ஸ், திருமண பேச்சு, பார்வை பரிமாற்றம், மோதல், அபரிமித இசை என மசாலா எண்டர்டெயினராக லவ் ஆக்ஷன் டிராமா படம் உருவாகியுள்ளது. ஓணம் பண்டிகைக்கு படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டீசரில், நயன்தாராவின் குரல் எங்கும் ஒலிக்கவில்லை. ஆனால், டீசர் முழுவதும் அழகுப்பதுமையாகவே நயன் ஜொலிக்கிறார். படத்தில் நயனுக்கு சண்டைக்காட்சிகள் எல்லாம் உள்ளதாம்..
Advertisment
Advertisements
சீனிவாசனின் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியாகி பல விருதுகளை வென்ற வடக்குநோக்கியாந்திரம் படத்தில் முதன்மை கேரக்டர்களின் பெயரிலேயே இந்த படத்திலும் கேரக்டர் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவின் பாலியின் கேரக்டருக்கு தினேசன் என்றும் நயன்தாராவின் கேரக்டருக்கு ஷோபா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சீனிவாசன் மற்றும் வினீத் சீனிவாசன் இந்த படத்தில் நடித்துள்ளனர். பாடல்களை வினீத் சீனிவாசன் எழுதியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது.