ஜிமிக்கி கம்மல் பாடல் பலமொழிகளில் வைரலானதை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து இன்னொரு ஹிட் பாடல் வைரலாகி வருகிறது.
நிவின் பாலி. நயன்தாரா நடிப்பில் தியான் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லவ் ஆக்சன் டிராமா. இந்த படத்தில் குடுக்கு போட்டிய குப்பயம் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல், தற்போது பல வெர்சன்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் தமிழிலும் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிமிக்கி கம்மல் பாடல், வினீத் சீனிவாசனின் குரலில், ஷான் ரஹ்மான் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது. தற்போது வெளியாகியுள்ள குடுக்கு போட்டிய குப்பயம் பாடலும், இதே கூட்டணியில் தான் உருவாகியுள்ளது.
லவ் ஆக்சன் டிராமா படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே பல மில்லியன் கணக்கில் பார்வையிட்டதை தொடர்ந்து, தற்போது இந்த பாடலும் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிமிக்கி கம்மல், ஏக் அதார் லவ் போன்றவை, மலையாள திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலக ரசிகர்களையும் கவர்ந்திருந்தது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை..