Advertisment

ரஜினிகாந்த் பற்றி எனக்கு அப்போ தெரியாது: அதுதான் எனக்கு உதவியது; சந்திரமுகி பற்றி மனம் திறந்த நயன்தாரா!

திரைத்துறையில் தனது ஆரம்பகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகை நயன்தாரா பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Nayanthar

திரைத்துறையில் தான் நடிக்க வந்த தொடக்கத்திலேயே, முன்னணி நடிகர்களுடனும், முன்னணி இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றியது எப்படிப்பட்ட அனுபவம் என்று நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

Read In English: Nayanthara on working with superstars at the start of her career: ‘I didn’t know Rajinikanth sir was such…’

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நடிப்பில், கடைசியாக அன்னப்பூரணி என்ற படம் வெளியானது. கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை என்றாலும், சமீப காலமாக அவர் கொடுக்கும் இன்டர்வியூகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அவரின் ஆவணப்படம் குறித்து அதற்கு என்.ஓ.சி.கொடுக்காத தனுஷ் குறித்தும் அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலானது.

இதனிடையே நயன்தாரா சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருடன் நடந்த உரையாடலில், தனது திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். திரைத்துறையில் நடிக்க வந்த தொடக்கத்தில், ஜெயராம், மோகன்லால், மம்முட்டி, சரத்குமார், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா, ஃபாசில், சத்யன் அந்திக்காடு, பி வாசு போன்ற உயர்மட்ட இயக்குநர்கள், ஹரி மற்றும் ஏஆர் முருகதாஸ் போன்ற தங்களது திறமைகளை நிரூபித்த இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தார்.  

Advertisment
Advertisement

நயன்தாரா நடித்த முதல் 7 படங்களில் இவர்களுடன் தான் நயன்தாரா இணைந்து நடித்தனர்., "ஆரம்பத்தில், நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நான் அந்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க அவர்கள் முன்  நிறுத்தப்பட்டேன், ”என்று சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேலில் நயன்தாரா கூறியிருந்தார்.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழு படத்தின் தமிழ் ரீமேக்கான பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தில் நடித்தது குறித்து பேசிய நயன்தாரா, “நான் முதல் நாள் முதல் காட்சி ரஜினி சாருடன் நடித்தேன். அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பது அப்போது எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். அப்போது நான் அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார்களுடன் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். எனவே, அவர்களின் நட்சத்திரத்தைப் பற்றி அறியாமல் இருப்பது எனக்கு உதவியது என்று கூறியுள்ளார்.

திரைத்துறையில் தனது ஆரம்ப வாழ்க்கையை வடிவமைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்ளுகன்கு நன்றி தெரிவித்த நயன்தாரா, "என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் நான் அந்த அற்புதமான திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவருடனும் பணிபுரிந்தேன், அவர்கள் என்னை ஒரு நடிகராக பரிணமிக்க உதவினார்கள்" என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment