/tamil-ie/media/media_files/uploads/2019/12/nayan.jpg)
Nayanthara nayanthara news, nayanthara temple visit,நயன்தாரா, சுவாமி தோப்பு, nayanthara images, நயன்தாரா புகைப்படங்கள், nayanthara pictures, நயன்தாரா விக்னேஷ் ஷிவன், nayanthara swamithoppu pictures, nayanthara swamithoppu images, nayanthara kanyakumari, nayanthara photos,
Nayanthara latest images: கன்னியாகுமரி அருகே சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதி கோயிலுக்கு நடிகை நயன்தாரா வெள்ளிக்கிழமை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
புகைப்படங்கள்: Jackson Herby
/tamil-ie/media/media_files/uploads/2019/12/New-Project-2019-12-20T204818.151-300x200.jpg)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஆன்மீக வழியில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்டவர். அவருடைய ஆன்மீகப் பணிகளுக்காகவும் சமூகப் பணிகளுக்காகவும் அய்யா வைகுண்டர் சுவாமியாக மக்களால் வணங்கப்படுகிறார். அய்யா வைகுண்டரின் கோயில் கன்னியாகுமரியில் சுவாமிதோப்பில் அமைந்துள்ளது.
புகழ்மிகு அய்யா வைகுண்டர் கோயிலுக்கு பொதுமக்கள், பக்தர்கள் மட்டுமல்லாமல் தேர்தலின்போது உள்ளூர் வேட்பாளர்கள் அய்யா வைகுண்டர் கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா 2011 தேர்தலுக்கு முன்பு அய்யா வைகுண்டர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபாடு செய்தார்.
நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்னும் திரைப்படத்தில் பகவதியம்மன் வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பகவதி அம்மனின் மகிமையை சொல்லும் விதமாக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவர் விரதம் இருந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நயன்தாரா மண்டைகாடு அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.