நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ரஜினியை பாலோ செய்கிறார். நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், தன்னை கலெக்டர் மதிவதனியாக மக்களிடம் கொண்டு சேர்த்த கோபிநயினாரை மீண்டும் தேர்வு செய்து தனது சொந்த தயாரிப்பிலேயே அறம் 2-ல் நடிக்கிறார்.
கோபிநயினாரின் அறம் படத்தின் முதல் பாகத்தில் கலெக்டராக கலக்கிய நயன்தாரா, கடைசியில் பதவியை ராஜினாமா செய்வது போன்று முடிவடையும் படம். ஆனால் பார்ட் 2 வாக தொடரும் என்று கடைசியில் தெரிவித்திருப்பார்கள். அதாவது மாவட்ட ஆட்சியராக இருக்கும் போது மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பது அரசியல் என்று தெரிந்ததும் மக்களுக்காக பணியாற்ற கலக்டராக இருப்பதைவிட கலெக்டருக்கு ஆணையிடும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதியாகி, இடையூறு வராமல் மக்கள் பணியாற்றும் நிகழ்கால அரசியலை கையிலெடுக்கும் கனமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றதாம்.
அரசியல் வசனங்களும் காரமாக இருக்கும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் விட ஸ்பெஷல் தன்னை பெண் ரஜினியாக அடையாளப்படுத்தும் அளவிற்கு வசனங்களை மட்டுமல்ல, இண்ட்ரொடக்க்ஷன் சாங் மற்றும் ஸ்டைல் பிஜிஎம் எனப்படும் மாஸ் பேக்ரவுண்ட் எபெக்ட் உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாராம்.
ஆனால் அது எதுவும் எல்லைமீறாமல் அதே நேரத்தில் பக்கா மாஸ் ஆகவும் கொடுக்க வேண்டும் என மெனக்கெடுகிறார். நயனுக்கு என்னவோ திட்டம் இருக்கு என புரிந்து கொண்ட தோழர்கள், நயன்தாராவின் கனவுக்கு தோள்கொடுக்கிறார்கள்.
திராவிட ஜீவா