ரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல... அதுக்கும் மேல! நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா?

Actress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.

Actress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara In Rajinikanth Politics, நயன்தாரா, ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா

Nayanthara In Rajinikanth Politics, நயன்தாரா, ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா

தமிழக அரசியலைவிட தமிழ் சினிமாவின் அரசியல் அனல் சில சமயங்களில் அதிகம். சினிமாவைவிட்டு பொதுவெளியிலும் அது தாக்கும். தற்போது சமூக வலைதளங்கள், ஆண்ட்ராய்ட் போன் மூலம் அடுப்படிவரை வந்துவிட்டதால் அடுக்கடுக்காண வதந்திகளும் பேசுபொருளாகிவிட்டது.

Advertisment

நடிகை நயன்தாரா தொடர்பான செய்திகள், வதந்திகள் எல்லாமே சினிமா உலகில் வைரல்தான். அவரது சினிமா மார்க்கெட்டும் இதற்கு ஒரு காரணம்! முன்ணனி நடிகர்களே நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு தவமிருக்கும் நிலை தற்போது உள்ளது.

அதே நேரம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நயன்தாராவும் சில நேரங்களில் அதிரடியாக சினிமாவில் அரசியல் செய்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடித்து தான் இன்னும் இளம் நடிகைதான் என்று நிரூபிக்கிற அக்கறை ஒருபுறம் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க அவர் காட்டும் வேகம் இன்னொரு ரகம்!

தற்போது முருகதாஸ் - ரஜினி கூட்டணியில் வரப்போகும் படத்தில் இடம் பிடிக்க நயன்தாரா ஆர்வமாகியிருக்கிறார். இதற்காக இயக்குனர் தரப்பை நயன் தரப்பில் அணுகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. நயன் இந்தப் படத்தில் ஆர்வம் காட்ட இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

அது, ரஜினியின் அரசியல்! ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம். அதனால் படத்தில் அரசியல் கொஞ்சம் அல்ல, நிறையவே தூக்கலாக இருக்கும். அப்படத்தில் நடிப்பது தனது ‘எதிர்கால அரசியலுக்கு’ சாதகமாக இருக்கும் என நயன்தாரா நினைப்பதாகவும் கூறுகிறார்கள்.

ரஜினியுடன் இணைந்து நயன்தாரா அரசியல் செய்யலாம் என்கிற பேச்சுகளும் சினிமா வட்டாரத்தில் பலமாக அடிபடிகின்றது. நயன்தாரா ரஜினிக்கு ஜோடியானால் இந்த செய்திகளும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டும்.

திராவிட ஜீவா

 

Rajinikanth Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: