நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக விளங்குகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவின் அனைத்து சிறந்த ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதோடு பல சூப்பர் ஹிட் படங்களை ஒரு தனி கதாநாயகியாக வழங்கியுள்ளார்.
ரசிகர்களிடையே நயன்தாரா மீதான க்ரேஸ் பல ஆண்டுகளாக இருக்கிறது. ’விஸ்வாசம்’, ’தர்பார்’ போன்ற அவரது சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, தற்போது ’அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார். சமீபத்தில், அவர் போலவே இருக்கும் படம் இணையத்தில் வைரலானது. அந்தப் படம் நயன்தாராவின் தோற்றத்தை சரியாகப் பிரதிபலித்தது. இது நெட்டிசன்களிடம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
நயன்தாராவைப் பிரதிபலிக்கும் இந்த போட்டோஷூட்டை செய்தவர், மாடல் விஷாஸ்ரீ. இந்த மேக் ஓவரை ஸ்டைலிஸ்ட் கண்ணன் ராஜமாணிக்கம் என்பவர் செய்தார். நயன்தாராவின் ஆட்டிட்யூடையும், தோற்றத்தையும், விஷாஸ்ரீயில் கொண்டு வந்துள்ளார் ராஜமாணிக்கம். விஷாஸ்ரீ மாடலிங் மட்டுமல்ல, நல்ல பாடகியும் கூட.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”