/tamil-ie/media/media_files/uploads/2018/07/nayanthara.jpg)
nayanthara
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா தனது ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறிய அந்த நாளுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.
நெல்சன் திலீப்குமாா் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகா் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, பிரபல தொகுப்பாளினி ஜேக்லின், நவீன் குமாா் உள்ளிட்ட பலா் நடித்துள்ளனா். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் பாடல்களுக்கு மெட்டு போட்டுள்ளார். இந்த படத்தின் பாடல்களை, கவுதம் மேனன், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் என பலர் எழுதியுள்ளனர். வெளிநாட்டு இசையில் இருந்து கரந்தெடுக்கப்பட்ட மெட்டுக்களை கொண்டு கோலமாவு கோகிலா படப் பாடல்களை உருவாக்கியுள்ளார் அனிருத். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியானது. படத்தின் பாடல் வீடியோக்களும் படக் குழுவினரால் வெளியிடப்பட்டது. படத்தின் டிரெய்லர் பலரையும் வெகுவாக கவர்ந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Mark up???? #KolamaavuKokila Releasing Worldwide on August 17th ???? #COCOfromAugust17pic.twitter.com/J2prDnTOUV
— Nayanthara✨ (@NayantharaU) 24 July 2018
கோலமாவு கோகிலா திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நயன்தாரா ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.