நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி உள்ளார் என்று தன்னை சுற்றி பல ஆண்டுகளாக உலா வரும் சர்ச்சைக்கு அவர் இப்போது முற்றுபுள்ளி வைத்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய வதந்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நயன்தாரா அளித்த சமீபத்திய பேட்டியில், "நான் புருவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுபடுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் அதுதான் முகத்திற்கு ‘கேம் சேஞ்சர்’. அடிக்கடி அதில் வித்தியாசம் தெரிவதால், என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை.
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும் தடித்து இருப்பது போலவும் தெரிகின்றன. அவ்வளவு தான், வேறொன்றுமில்லை.
நீங்கள் என்னை கிள்ளி பார்க்கலாம், எரித்து கூட பார்க்கலாம் ஆனால் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“