/indian-express-tamil/media/media_files/vsOJl4RLwnP6w97LrdaY.jpg)
நடிகை நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நிலையில், தயவு செய்து அப்படி சொல்லாதீங்க எல்லாரும் திட்றாங்க என்று நயன்தாரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்னப்பூரணி. ஜெய் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் சமையல் கலையில் சாதிக்க விரும்பும் பிராமணர் குடும்பத்து பெண்ணின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைச்சப்பட்டிருந்தது. நீலேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் நயன்தாராவின் காதலராக ஜெய் நடித்திருந்தார்.
இதனிடையே நயன்தாரா தனது கேரியரில் 75 படங்களை முடித்துள்ளார். இவரது மைல்கல்லான 75வது படம் தான் 'அன்னபூரணி'. சமீபத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் குறித்து நயன்தாரா ஜெய் மற்றும் படத்தின் இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா ஆகியோர் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது இந்த நேர்காணல் தொடர்பான ப்ரமோ வெளியாகியுள்ளது இதில்,75 படங்களை முடித்துள்ள நயன்தாரா, சினிமா மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் "என் வாழ்க்கையில் எனக்கு இருக்கும் அனைத்தும். அது புகழோ, பணமோ அல்லது மரியாதையோ இவை அனைத்தும் எனக்கு சினிமா மற்றும் ரசிகர்களால் பரிசாக கிடைத்தவை என்று கூறியுள்ளார்.
Catch the exclusive interview of Nayanthara, Jai and Director @Nilesh_Krishnaa today at 6pm. #Annapoorani - The Goddess of Food running successfully in cinemas near you. pic.twitter.com/GkTSeaViAs
— Zee Studios South (@zeestudiossouth) December 8, 2023
தொடர்ந்து தொகுப்பாளர் அர்ச்சனா, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தபோது, நயன்தாரா "தயவுசெய்து அப்படிச் சொல்லாதீர்கள். யாராவது சொன்னால் என்னைத் திட்டுவார்கள்" என்று வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். மேலும் திரையில் தனக்கு சிறந்த அப்பா சத்யராஜ் தான் என்றும் நயன்தாரா கூறியுள்ளர்ர். அதேபோல் இந்த நேர்காணலில் ஜெய் மற்றும் நயன்தாரா இடையே பல மகிழ்ச்சியான தருணங்கள் இருப்பதாக தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.