Advertisment

டூ டுட்டு டூ டுட்டு... ஆட்டம் போட்ட விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா: காத்துவாக்குல ரெண்டு காதல் த்ரோபேக் வீடியோ!

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் படத்தின் பி.டி.எஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nayanthara, Samantha Ruth Prabhu, Vijay Sethupathi dance together as Kaathuvaakula Rendu Kaadhal complete 2 years Watch throwback video Tamil News

விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள இன்ஸ்டா வீடியோவில், டூ டுட்டு டூ டுட்டு டுட்டு டூ டூ, ஐ லவ் யூ டூ பாடலுக்கு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடமாடுகிறார்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Nayanthanra | Vijay Sethupathi | Samantha Ruth Prabhu: தமிழின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளிவந்த படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா - சமந்தா நடித்திருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

Advertisment

காதல் காமெடியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம், இரண்டு பெண்களுடனான முக்கோணக் காதலில் சிக்கித் தவிக்கும் ராம்போவின் (விஜய் சேதுபதியின்) கதையைச் சொல்கிறது. படத்தில் நயன்தாரா கண்மணி கங்குலியாகவும், சமந்தா ரூத் பிரபு கதீஜா பேகமாகவும் நடித்துள்ளனர். 

இந்நிலையில், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் படத்தின் பி.டி.எஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டூ டுட்டு டூ டுட்டு டுட்டு டூ டூ, ஐ லவ் யூ டூ பாடலுக்கு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடமாடுகிறார்கள். அவர்களுடன் நடன இயக்குநரும், படத்தின் இயக்குநரும் நடனமாடுகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Samantha Ruth Prabhu Vijay Sethupathi Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment