லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' திரைப்படம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) வெளியானது. அன்னபூரணி படம் ஒரு கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்:
நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாக சமூக ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
நடிகை நயன்தாரா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அதே நேரத்தில், கதாநாயகிகளை மட்டுமே மையமாகக் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், நடிகை நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்துள்ள 'அன்னபூரணி' திரைப்படம் கடும் போட்டிக்கு மத்தியில் அதிக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அண்மையில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்துக்கு அவருடைய ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். ரசிகர்கள், நெட்டிசன்கள் அன்னப்பூரணி படம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அன்னபூரணி படத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும்போது சிறப்பாக் இருப்பதாக நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்துள்ளனர். அன்னபூரணி படத்தின் கதை பார்வையாளர்கள் யூகிக்கக் கூடிய அளவுக்கு எளிமையான கதை. இதனால், த்ரில்லிங் தன்மை இல்லை, ஆனால், நிலேஷ் கிருஷ்ணாவின் ஸ்டைலான மேக்கிங் படத்தை ரிச்சாகக் காட்டியுள்ளது. ஆனால், இயக்குனர் திரைக்கதையில் ஈர்க்கத் தவறிவிட்டார். இசையமைப்பாளர் தமன் தனது இசை மூலம், அன்னபூரணி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
அன்னபூரணி படத்தில் ஒரு பிராமணப் பெண்ணின் பிரச்சனைகளைப் பேசும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் பாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார் ஆகியோர் அவர்களின் கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, 'அன்னபூரணி' கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படம் நயன்தாராவுக்கு மற்றொரு வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“