‘காட்டுமிராண்டிகளுக்கு இனிமேல் பயம் வரும்’ – தெலங்கானா என்கவுண்ட்டரை வரவேற்று நயன்தாரா அறிக்கை

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதற்கு நடிகை நயன்தாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.  அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது உண்மையான நாயகர்களால். தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை […]

nayanthara speech on women empowerment
nayanthara speech on women empowerment

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதற்கு நடிகை நயன்தாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.


அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது உண்மையான நாயகர்களால். தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயன் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும் , அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மிதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara statement on telengana police encounter on doctor rape and murder case

Next Story
Darbar Audio Launch Updates : பற்ற வைத்த லாரன்ஸ்; அமைதியாய் கவனித்த ரஜினி – தர்பார் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்Darbar Audio Launch Live Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X