Nayanthara photoshoot gets trending : தி வோக் இதழின் 2019 எடிசனுக்காக நடிகை நயன்தாரா நிகழ்த்தியுள்ள போட்டோஷூட், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். முன்னணி நடிகருக்கு நிகராக சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, சர்ச்சைகளிலும் பஞ்சமில்லாமல் அவர் பெயர் அடிபட்டு வருகிறது. இருந்தபோதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருப்பது அவரது தனிச்சிறப்பே ஆகும்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் விரைவில் நயன்தாரா திருமணம் என்ற செய்தியின் சூடு இன்னும் ஆறாதநிலையிலேயே, தி வோக் பத்திரிகைக்காக, நயன்தாரா நடத்தியுள்ள போட்டோஷூட், டிரெண்டிங் ஆகியுள்ளது.
நடிகை நயன்தாராவுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்தவொரு சமூகவலைதளங்களில் கணக்கு இல்லாதநிலையிலும், அவரது ரசிகர்கள், தி வோக் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே, நயன்தாராவின் போட்டோஷூட்டுக்கு ஒரு லட்சம் லைக்குகள் இட்டுள்ளனர். மேலும் அவரது போட்டோக்களுக்கு தொடர்ந்து லைக் போட்டு வருவதால், இந்த போட்டோஷூட், சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
சூப்பர் சவுத் என்ற பெயரில், அக்டோபர் எடிசனாக வரும் தி வோக் இதழின் முன்பக்க அட்டையில், நடிகர் மகேஷ் பாபு, துல்கர் சல்மான் மற்றும் நடிகை நயன்தாராவின் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
நயன்தாரா நடிப்பில் இந்த தீபாவளி பண்டிகைக்கு பிகில் படமும், பொங்கல் பண்டிகைக்கு தர்பார் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.