லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் எப்போது திருமணம் என்பதை ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான நயன்தாரா, கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக தெரிவித்தார். விஜய் டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ’லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துக் கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து தனது ரசிகர்களிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் முன்னனி தொகுப்பாளரான டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படம் சில நாட்களுக்கு முன் ஹாட் ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், டிடி, நயன்தாராவின் கையில் இருக்கும் மோதிரம் குறித்து கேட்டதற்கு, இது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறினார் நயன்தாரா. இதனை ப்ரோமோவாக வெளியிட்டது விஜய் டிவி. நயன்தாராவுக்கு நிச்சயம் முடிந்ததை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 15 அன்று முழு நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பட்டது. அதில் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்களை மட்டும் அழைத்ததாக நயன்தாரா கூறினார். திருமணம் எப்போது என்று கேட்டபோது, திருமணம் ஆன சொல்வோம், அப்போது எல்லோரையும் அழைப்போம், நாங்கள் பொது வெளியில் அறிவிக்க மாட்டோம். என்று கூறியுள்ளார்.
மேலும், விக்னேஷ் சிவன் குறித்து, நான் அதிகம் பேசியதில்லை. நான் சந்தித்த ஆண்களில் பெரும்பாலானோர் ஒரு பெண்ணின் வெற்றியை எப்படி நிறுத்துவது என்று யோசிப்பார்கள். ஆனால் விக்னேஷ் என் வாழ்க்கையில் வந்த பிறகு நான் அதிகமா வேலை (படங்கள்)செய்தேன். நான் என்ன செய்யும் வேலையை நன்றாக செய்கிறேன் என்று என்னை உணர வைக்கிறார் என்று நயன்தாரா கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/nayanthara-ring.jpg)
விக்னேஷ் சிவன் தன்னை அவ்வளவும் காதலிப்பதாக கூறிய நயன்தாரா, அவர் தன் அம்மாவையும் சகோதரியையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். என்றும், பொதுவாக ஆண்கள் பெண்களைப் போல் தாய்மார்களையும் சகோதரிகளையும் கவனிப்பதில்லை, ஆனால் அவர் அப்படி இல்லை. ஆறு வருடங்கள் ஆகிறது, அவர் தினமும் அவர்களுக்கு போன் செய்து பேசுகிறார், மறக்காமல் சாப்பிட்டிங்காளா என்று கேட்கிறார், என்று தன் காதலன் குறித்து கூறினார்.
திருமணம் மற்றும் லிவ்-இன் ரிலேசன்சிப் குறித்து டிடி கேட்டபோது, அது அந்தந்த தம்பதியரைப் பொறுத்தது என்றும், அவர்கள் எடுக்கும் முடிவுகளை ஒருவர் மதிப்பீடு செய்யக்கூடாது, நாம் ஒரு நவீன மற்றும் முற்போக்கு சிந்தனை நிறைந்த உலகில் வாழ்கிறோம். இது சரியா அல்லது தவறா என்று யாரும் சொல்லக்கூடாது. உங்களுக்கு வசதியானதைச் செய்யுங்கள், என்று நயன்தாரா கூறினார்.
அடுத்தடுத்து பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கு நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படம். மேலும், விஜய் சேதுபதி மற்றும் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலும் பணியாற்றி வருகிறார். அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கும் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார். இப்போதைக்கு 'ப்ரொடக்ஷன் எண் 38' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil