/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-78.jpg)
Nayanthara, Lady Super Star, Mookuthi Amman, video, viral, netizens, Troll, நயன்தாரா, மூக்குத்தி அம்மன், லேடி சூப்பர்ஸ்டார், வீடியோ, வைரல், நெட்டிசன்ஸ்
Nayanthara non veg video : தர்பார் படத்தின் டப்பிங், விரைவில் நடிக்க உள்ள மூக்குத்தி அம்மன் படங்களுக்கு இடையில், காதலர் விக்னேஷ் சிவன் உடன் நயன்தாரா இருப்பதாக வெளியாகியுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Nayanthara, Lady Super Star, Mookuthi Amman, video, viral, netizens, Troll, நயன்தாரா, மூக்குத்தி அம்மன், லேடி சூப்பர்ஸ்டார், வீடியோ, வைரல், நெட்டிசன்ஸ்
தர்பார் படத்தின் டப்பிங், விரைவில் நடிக்க உள்ள மூக்குத்தி அம்மன் படங்களுக்கு இடையில், காதலர் விக்னேஷ் சிவன் உடன் நயன்தாரா இருப்பதாக வெளியாகியுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா, சமீபத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ளாத நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் நான் வெஜ் உணவு பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
Happy Thanksgiving ???? ????????With Some magical ????♀️ powers #ThanksgivingSpecial pic.twitter.com/aVtvUcNab0
— Nayanthara✨ (@NayantharaU) November 29, 2019
அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
வழக்கம் போல் நயன்தாராவின் அழகை வியந்து பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வரும் நிலையில், ஒருசிலர் தர்பார் படத்தின் டப்பிங் பணிக்கு செல்லுங்கள் என்று அவருக்கு ஆலோசனையும் கூறி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தொடங்கும் போது நயன்தாரா சைவத்துக்கு மாறி விரதம் இருப்பார். அவரைத் தொடர்ந்து ஒட்டு மொத்த படக்குழுவும் சைவத்துக்கு மாறிவிட்டதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். அதைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நெட்டிசன் ஒருவர் “மூக்குத்தி அம்மன் படத்துக்கு விரதம் என்று சொன்னீங்களே” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.