38-வது பிறந்த நாள்... விக்னேஷ் சிவனுக்கு விழா எடுத்த நயன்தாரா : சங்கர், லோகேஷ் பங்கேற்பு

38-வது பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவனுக்கு அவரது மனைவி நயன்தாரா பிறந்தநாள் விழா எடுத்துள்ளார். இந்த விழாவில் ஷங்கர் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

38-வது பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவனுக்கு அவரது மனைவி நயன்தாரா பிறந்தநாள் விழா எடுத்துள்ளார். இந்த விழாவில் ஷங்கர் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

author-image
WebDesk
New Update
Nayan Wikki

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் விழாவை நடத்திய நயன்தாரா

ஆங்கிலத்தில் படிக்க...

இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இந்த கொண்டாட்டம் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சிம்பு வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து தனது காதலி நயன்தாராவை திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவனுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே நேற்று (செப்டம்பர் 18) தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்களுடன் பிறந்தநாள் விழாவை நடத்தி அந்த நாளை மறக்கமுடியாததாக நாளாக மாற்றிக்கொண்ட நிலையில், பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட இரண்டு வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன.

Advertisment
Advertisements

ஒரு வீடியோவில், விக்னேஷ் சிவன் இசையமைப்பாளர்களுடன் "மின்னலே படத்தில் இருந்து வெண்மதி" என்ற ஹிட் தமிழ் பாடலுடன் நடமாடுகிறார். அதனைத் தொடர்ந்து உற்சாகமாக இருக்கும் நயன்தாராவுடன் இணைந்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் மற்றும் லோகேஷ் கனகராஜ் முன்னிலையில் விக்னேஷ் சிவனும் கேக் வெட்டினார்.

இந்த பிறந்த நாள் விழா குறித்து நயன்தாரா விக்னேஷுடன் சில படங்களைப் பகிர்ந்து சமூக ஊடகங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்"இந்த சிறப்பு நாளில் உங்களைப் பற்றி நான் நிறைய எழுத விரும்புகிறேன், ஆனால் நான் தொடங்கினால், சில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன் !! உங்கள் அன்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ”என்று பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் அடுத்த இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை இன்னும் பெயரிடப்படாத படத்தில் இயக்கவுள்ளார். நானும் ரவுடி தான் மற்றும் காட்டுவாக்குல ரெண்டு காதல் படங்களுக்குப் பிறகு நயன்தாராவும் விக்னேஷுடன் நடிகராக மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. மறுபுறம், ஷாருக்கானின் ஜவான் மூலம் இந்திய சினிமாவில் புகழ் பெற்றுள்ள நயன்தாரா, அடுத்து ஜெயம் ரவியுடன் நடித்துள்ள இறைவன் படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். மேலும் டெஸ்ட், மற்றும் மன்னகட்டி ஆகிய படங்களும் நயன்தாராவின் பைப்லைனில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vignesh Shivan Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: