அஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா... நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி!

அப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஒரு ஜோடி, மகன் அஜித்திற்கு தான் நடிகை நயன்தாரா ஜோடி

’கோலிவுட்டின் குயின்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாராவிற்கு தல அஜித் வழங்கிய அந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் தான் டாக் ஆஃப் கோலிவுட்.

நடிகை நயன்தாரா எந்த மேடையில் ஏறினாலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தல அஜித் தான் என்று பலமுறை கூறியுள்ளார். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக அஜித்துடன் நயன் தாரா கைக்கோர்த்துள்ள திரைப்படம் தான் விஸ்வாசம்.

இயக்குனர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகின. விஸ்வாசம் படத்தில் அஜித் அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஒரு ஜோடி, மகன் அஜித்திற்கு தான் நடிகை நயன்தாரா ஜோடி என்று ஏகப்பட்ட தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்து வருகின்றன.

விஸ்வாசம் படத்தில் நயன்தாரா டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் என்று தகவலும் பரவலாக வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் அஜித் நயன்தாராவிற்கு ஒரு சர்ப்பிரைஸ் கிஃப்ட் ஒன்றை அளித்துள்ளார். தல அஜித் நடிப்பதில் மட்டுமில்லை புகைப்படம் எடுப்பது, கார் ரேஸ் என எல்லாவற்றிலும் கைத்தேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ’வீரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகர் அப்புக்குட்டியை வைத்து விதவிதமாக ஃபோட்டோ எடுத்து அவருக்கு கிஃப்ட் கொடுத்து படக்குழுவை அசர வைத்தார்.

ஸ்ருதிஹாசனை அஜித் எடுத்த புகைப்படங்கள்

ஸ்ருதிஹாசனை அஜித் எடுத்த புகைப்படங்கள்

வேதாளம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஸ்ருதிஷாசனை தனது கேமிராவில் கிளிக் செய்து அவருக்கும் சர்ப்பிரைஸ் செய்தார். இப்போது நடிகை நயன்தாராவிற்கும் இதுப்போன்றே ஒரு இன்ப பரிசை தந்துள்ளார் தல அஜித். நயனை விதவிதமான மேக்கப்பில் 10 விதங்களில் புகைப்படமாக எடுத்து அதை ஆல்பமாக வடிவமைத்து அவரின் கையில் தந்துள்ளார்.

நடிகர் அப்புக்குட்டியின் ஃபோட்டோ ஷூட்

நடிகர் அப்புக்குட்டியின் ஃபோட்டோ ஷூட்

இஅதை சற்றும் எதிர்ப்பார்க்காத நயன் மகிழ்ச்சியில் சின்ன டான்ஸே போட்டாராம். ஃபோட்டோவை பார்த்த படக்குழுவினர் பி.சி ஸ்ரீராம் கேமிராவில் ஹீரோயின்ஸ் மின்னுவதை போல் அஜித் எடுத்த ஃபோட்டோவில் நயன் ஜொலிப்பதாக கூறி நயனை கூடுதலாக குஷிப்படுத்தியுள்ளனர்.

×Close
×Close