Advertisment

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய வீடியோ

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Nayanthara, Nayanthara Vignesh Shivan deepavali wishes, Nayanthara Vignesh Shivan video, நயன்தாரா, நயன்தாரா - விக்னேஷ் சிவன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தீபாவளி வாழ்த்து வீடியோ, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தை, Nayanthara Vignesh Shivan gets twins babies

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடந்த நிலையில், அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தைகள் பெற்றதாக அறிவித்தனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், திருமணமாகி 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கின்றன. இதனால், நயன்தாரா - விக்னேஷ் சிவன் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தையுடன் தங்கள் தல தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் இரட்டைக் குழந்தையுடன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Nayanthara Vignesh Shivan Deepavali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment