நெருக்கம் பழசு… மோதிரம் புதுசு! அப்போ நயன்- விக்கி நிச்சயதார்த்தம் முடிந்ததா?

Nayanthara Vignesh Shivan got engaged Viral Photos இந்தப் புகைப்படத்தில் யாருடைய முகமும் தெரியவில்லை என்பதுதான் குழப்பத்திற்குக் காரணம்.

Nayanthara Vignesh Shivan got engaged Viral Photos in Social Media Tamil News
Nayanthara Vignesh Shivan got engaged Viral Photos

Nayanthara Vignesh Shivan got engaged Tamil News : ‘நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?’ என்கிற கேள்விதான் தற்போது கோலிவுட்டை சுற்றிப் பரபரப்பாக உலாவி வருகிறது. வழக்கம்போல இதுவும் வதந்திதான் என்கிற கூட்டமும் ஒரு பக்கம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் அந்த ஒரு புகைப்படம்தான்.

Nayanthara Vignesh Shivan got engaged

விரலில் அணிந்திருக்கும் மோதிரம் ஃபோக்கஸ் செய்தபடி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தைக் கண்டு, நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துவிட்டது என்று நெட்டிசன்கள் டிஸ்கஷனில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்தப் புகைப்படத்தில் யாருடைய முகமும் தெரியவில்லை என்பதுதான் குழப்பத்திற்குக் காரணம்.

Nayanthara Vignesh Shivan Viral Photos in Social Media

எப்போதும் நயன்தாராவோடு க்ளிக்கிய புகைப்படங்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களைக் கடுப்பேற்றும் விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தள பக்கத்திலும் இந்த புகைப்படம் இல்லை. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தமாட்டார் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால், அவருடைய பெயரில் ஏராளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் உள்ளன. அப்படிப்பட்ட ரசிகர்கள் கணக்கில்தான் இந்த புகைப்படம் இருக்கிறது, இது வெறும் வதந்திதான் என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஐந்து வருடங்களுக்கு மேலாகக் காதல் உறவிலேயே இருக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் எப்போது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முதன்மையாக இருக்கிறது. வெறும் புகைப்படங்களைப் பதிவேற்றிக் கடுப்பேற்றாமல், சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்பது பலரின் மைண்ட் வாய்சாக இருக்கிறது!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara vignesh shivan got engaged viral photos in social media tamil news

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com