உலகின் மிகச்சிறந்த ஹனிமூன் லொகேஷனில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

விக்கியும் நயனும் சாண்டோரினிக்கு செல்வதற்கான விமான டிக்கெட் தான் அது.

விக்கியும் நயனும் சாண்டோரினிக்கு செல்வதற்கான விமான டிக்கெட் தான் அது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

தமிழ் சினிமாவிம் முக்கிய ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன்.

2015-ல் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்ததிலிருந்து, அவருடன் காதலில் இருக்கிறார் நயன்தாரா.

Advertisment

இவர்கள் பல இடங்களில் ஒன்றாக வலம் வருகிறார்கள். ஆனால் தங்கள் காதலைப் பற்றி வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. காதல் பற்றிய செய்திகளை மறுக்கவும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவில், விருது பெற்ற நயன்தாரா தனது குடும்பத்தினருடன் சேர்த்து என்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவருக்கும் நன்றி என்றார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒன்றாக ஊர் சுற்றும் படங்கள் உடனே வைரலாகும்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். விக்கியும் நயனும் சாண்டோரினிக்கு செல்வதற்கான விமான டிக்கெட் தான் அது.

Advertisment
Advertisements

View this post on Instagram

Flying towards #santorini @cavotagoosantorini ???????????????????????? #santorini #dreamdestination #vacayMode

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on

பெரும்பாலான ஜோடிகள் தேர்வு செய்யும் ஹனிமூன் ஸ்பாட் தான் இந்த சாண்டோரினி. ஆக, அமெரிக்கா, பாரிஸைத் தொடர்ந்து மீண்டுமொரு ரொமாண்டிக் ட்ரிப்புக்கு தயாராகியிருக்கிறார்கள் இந்த ஜோடி.

இதைத் தொடர்ந்து க்ரீஸிலுள்ள சாண்டோரிக்கு சென்ற பின் அங்கு எடுத்த நயன்தாராவின் படத்தையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Tamil Cinema Nayanthara Vignesh Sivan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: