கோலிவுட்டில் எப்போதும் பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இந்த புத்தாண்டை துபாயில் பிரபலமான புர்ஜ் கலிஃபாவில் நெருக்கமாகக் கொண்டாடியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், கோலிவுட் மட்டுமில்லாமல், தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களாலும் சினிமா உலகத்தில் பேசப்படும் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் ஜோடி துபாய் சென்று புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். படப்பிடிப்பு தளங்கள், கோயில்கள் மற்றும் சுற்றுலா என பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். முன்னர் ஓணம் கொண்டாட்டத்தின்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானத்தில் கொச்சி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
அதே போல, இந்த 2022 புத்தாண்டைக் கொண்டாட திட்டமிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, துபாய் சென்று அங்கே பிரபலமான புர்ஜ் கலிஃபா இடத்தில் மிக உயரமான கட்டத்தின் முன்பு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர். புத்தாண்டு பிறந்ததும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாய் புர்ஜ் கலிஃபா டவரில் 2022 புத்தாண்டு பிறப்பதற்கான கவுன்ட்டவுன் தொடங்குகிறது. புத்தாண்டு பிறந்ததும் நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் மகிழ்ச்சியுடன் கட்டியனைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. விக்னேஷ் சிவன் நயன்தாராவின் நெற்றியில் முத்தமிடுகிறார்.
2022 புத்தாண்டு பிறக்கும்போது துபாயில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளன்ர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் குறிப்பிடுகையில், “இங்குள்ள அனைத்து அழகான உள்ளங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2022 மிகவும் அமைதியான, மகிழ்ச்சியான, வெற்றிகரமான, ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்கும்!!
ஏனென்றால், கடவுளுக்குப் பிரியமானவர்களைச் சோதிக்கும் கடவுள் சோதித்த பிறகு, அவர்கள் அனைவருக்கும் மகத்தான ஆசீர்வாதங்களை வழங்குகிறார்!
கடந்த இரண்டு வருடங்களாக அவர் ஒரு சிறிது எல்லோரிடமும் அவ்வளவு நல்லவிதமாக இல்லாமல் இருக்கிறார். முக்கியமாக எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான தொற்றுநோய் காரணமாக அதை அனுமதித்ததற்கு அவர் வருந்துகிறார்!
எனவே கடந்த 2 ஆண்டுகளாக கடந்து வந்த அனைத்து மந்தமான தருணங்களுக்கும் ஈடுசெய்யும் வகையில்!
அவர் உறுதி செய்வார்! அவர் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் இரண்டு மடங்கு தருவார். ஏனென்றால் நாம் அதற்கு தகுதியானவர்கள் என்று அவருக்குத் தெரியும். உண்மையில் நமக்கு மிகவும் தேவை!
இன்று முதல் அனைத்து நன்மைகளும் உங்களை வந்து சேரும் என்று எதிர்பாருங்கள்.
ஒரு அற்புதமான, வளமான, மகிழ்ச்சியான புத்தாண்டு 2022!
எங்கள் இதயங்களின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்கள்!” என்று ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“