Nayanthara Vignesh Shivan: திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், இறுதியாக சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 17 படத்தின் வேலைகளிலும் பிஸியாக உள்ளார். அதோடு, இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா ஆகியோருடன் இணைந்து நெட்ஃப்ளிக்ஸிற்காக ஆந்தாலஜி வெப் சிரீஸ் ஒன்றையும் இயக்குகிறார்.
அதோடு தயாரிப்பாளராக மாறி, ரவுடி பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். மிலிந்த் ராவ் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் 'சேக்ரட் கேம்ஸ்' புகழ் நடிகர் லூக் கென்னி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
Advertisment
Advertisements
இந்நிலையில் விக்னேஷுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த, ‘நானும் ரவுடி தான்’ படம் வெளியாகி 4 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராமில், “நன்றி தங்கமே! உங்களை சந்தித்தபின் வாழ்க்கை என்னை ஆசீர்வதித்து, இனிமையான தருணங்களை மட்டுமே கொடுத்திருக்கிறது! இந்த நாளுக்கு நன்றி! இந்த படத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.. இதனால் தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க, வாய்ப்பு கிடைத்தது! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக !” என நயனுடன் தான் இருக்கும் படத்தைப் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ்!