/tamil-ie/media/media_files/uploads/2020/04/nayan-thara-vignesh-sivan-1.jpg)
nayanthara vignesh shivan talking viral video, actress nayanthara, director vignesh shivan, நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல், வைரல் வீடியோ, நானும் ரவுடிதான், பாண்டிச்சேரி, புதுச்சேரி, nayanthara vignesh shivan talking at pondychery sea shore, tamil ciena news, tamil cinema video news, latest tamil cinema news, nayanthara video news
இயக்குனர் விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரி கடற்கரையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நயன்தாராவுடன் பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இருக்கும் இந்த புதிய வீடியோவை சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவை ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். நயன்தாரா தொடர்ந்து ஹிரோயினை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் தனக்கென ஒரு ராஜபாட்டையை அமைத்து வருகிறார்.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது சினிமா வட்டாரத்தினரும் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
கொரோனா பொது முடக்க காலத்தில், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அது விழிப்புணர்வு வீடியோ அல்ல. பழைய வீடியோவும் அல்ல. யாரும் இதுவரை பார்க்காத புதிய வீடியோ.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங்கின் போது பாண்டிச்சேரியில் நடிகை நயன்தாரவுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புத்தம் புது வீடியோ அது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தை இயக்கும்போதுதான், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார்.
இந்த வீடியோவில், பாண்டிச்சேரியில் நடைபெற்ற நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது, விக்னேஷ் சிவன், நயன்தாராவிடம் படத்தில் விஜய்சேதுபதியுடன் கடற்கரையில் நின்று பேசும் காட்சியை விவரிக்கிறார். அதனை, நயன்தாரா சிரித்துக்கொண்டே கேட்கிறார்.
”ஒரு காலத்தில் பாண்டிவுட்டில் மறக்கமுடியாத தருணம்” என்று விக்னேஷ் சிவன் இந்த வீடியோவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.