நயன்தாராவுக்கு கொரோனா வதந்தி: விக்னேஷ் சிவன் பதிலடி பதிவு

”நீங்கள் கேலி செய்வதையும், உங்கள் அனைவரின் கற்பனை கலந்த நகைச்சுவையையும் காண, கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்”

Nayanthara Vignesh Shivan
விக்னேஷ் சிவன் – நயன்தாரா

Nayanthara Vignesh Shivan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் நயன்தாராவுக்கு கொரோனா தொற்று என்ற செய்தியில் உண்மையில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நயன்தாராவுடன் இணைந்து ஃபேஸ் ஆப் மூலம் ஒரு ஜாலியான பாடலுக்கு விதவிதமான முக பாவனைகள் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், தாங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ”நீங்கள் கேலி செய்வதையும், உங்கள் அனைவரின் கற்பனை கலந்த நகைச்சுவையையும் காண, கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாகவே, ஃபேஸ் ஆப் எனப்படும் செயலி மூலம் பெண் முகத்தை ஆண் முகமாகவும், ஆண் முகத்தை பெண் முகமாகவும், வயதான தோற்றத்தை வயது குறைவான தோற்றமாகவும், வயதானவர்களை வயது குறைவாக இருப்பது போன்றும் மாற்றி தங்கள் படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். தற்போது இதன் மூலம் தான், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வீடியோ பதிவிட்டிருக்கிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara vignesh shivan video coronavirus covid 19

Next Story
தளபதி விஜய் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துகளால் திணறும் ட்விட்டர்!Happy Birthday Thalapathy Vijay, VIjay Birthday
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com