Advertisment

நயன்தாரா திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் : ஒரு மாதத்திற்கு பின் வெளியான போட்டோஸ்

ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், திருமணத்திற்கு வந்த முன்னணி பிரபலங்களுடன் விக்கி – நயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

author-image
WebDesk
Jul 10, 2022 14:05 IST
நயன்தாரா திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் : ஒரு மாதத்திற்கு பின் வெளியான போட்டோஸ்

7 வருடங்களுக்கு மேலாக காதலில் இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர்.

Advertisment
Gallery
Gallery

தொடர்ந்து மறுவீடு அழைப்புக்காக கேரளா மாநிலம் சென்ற விக்கி –நயன் ஜோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன்பிறகு கேரளா பாரம்பரிய உடையில் சாமி தரிசனம் செய்த இவர்கள் அடுத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஹனிமூன்காக தாய்லாந்து சென்றனர்.

Gallery

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து தற்போது ஹனிமூன் முடிந்து திரும்பிய நயன்தாரா ஷாருக்கானுடன் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். அதே சமயம் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வரும் விக்னேஷ் சிவன் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Gallery

இந்நிலையில், நயன் விக்கி திருமணத்தின்போது ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலும் மணமக்களாக விக்கி நயன் இருவரும் மட்டுமே இருந்தனர். தற்போது திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், திருமணத்திற்கு வந்த முன்னணி பிரபலங்களுடன் விக்கி – நயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Gallery
Gallery

இந்த புகைப்படங்களில் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம்,ரஜினிகாந்த், இயக்குநர் அட்லி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Vignesh Shivan #Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment