Nayanthara: நடிகை நயன்தாரா மீடியாக்களுக்கு நேர்காணல்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பதில்லை என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் ’வோக் இதழ்’ இவரை தங்கள் பத்திரிகை அட்டையில் இடம் பெறச் செய்து, “10 ஆண்டுகளில் குறிப்பிடத் தகுந்த நேர்காணல்” என்ற தலைப்பில் நேர்க்காணலும் செய்துள்ளது. அதில் ‘ஆண்களுக்கு ஏன் எல்லா சக்தியும் எப்போதும் இருக்க வேண்டும்?’ போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் நயன்.
Advertisment
தனது தனி படங்களில் எல்லாவற்றையும் தானே முடிவெடுப்பதாக குறிப்பிட்ட நயன்தாரா, "கணவன் அல்லது ஆண் நண்பர்களைச் சுற்றி வரும் கதைகளை இயக்குநர்கள் கொண்டு வரும்போது, அது கட்டாயமா என்று நான் எப்போதும் கேட்பேன்" என்று கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இது தான் தனது முதல் நேர்காணல் என்றும் அவர் குறிப்பிட்டார். “நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகம் அறிய விரும்பவில்லை. பல முறை, நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன், தவறாக சித்தரிக்கப்பட்டேன். இதை கையாள மிகவும் கடினமாக இருந்தது. நடிப்பதும் எனது எனது வேலை, என் படங்கள் பேசும்” என்றார்.
மேலும் தொடர்ந்த நயன், "நான் 2011-ல் படங்களிலிருந்து விலகி இருந்தபோது, எனது பாடல்களும் திரைப்படங்களும் ஒளிபரப்பட்ட சேனல்களைக் கூட நான் பார்க்கவில்லை" என்று கூறினார். அதே சமயம், சர்ச்சைகளுக்கு, தேவைப்படும்போது மட்டுமே பதிலளிப்பதாக நயன்தாரா கூறினார். “நான் எப்போதும் பிஸியாக இருப்பேன், எல்லா நேரத்திலும் படப்பிடிப்பில் இருப்பேன். வெற்றியை என் தலைக்கு ஏற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட நபர்” என்றும் குறிப்பிட்டார்.