நடிகை நயன்தாரா அன்னபூரணி படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான சைமா விருது விழா துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ் திரைத் துறைக்கும் பல்வேறு விருதுகள் கிடைத்தது.
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய் நடிப்பில் வெளியான படம் அன்னபூரணி. இதில் சமையல் கலைஞராக நயன்தாரா நடித்திருப்பார். நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான போது படத்தில் இருந்த ஒரு காட்சி தொடர்பாக வட இந்தியாவில் இந்து- முஸ்லீம் ஐ தொடர்புபடுத்தி சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து நயன்தாரா ஜெய் ஸ்ரீராம் எனக் குறிப்பிட்டு மன்னிப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், அன்னபூரணி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுள்ளார். தொடர்ந்து நடிகையும், மனைவியுமான நயன்தாரா விருது பெறும் போது மேடைக்கு வந்த கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து முத்தமிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“