ஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா?

மும்பையில் நடைபெறும் ஐபிஎல் 2018ம் இறுதி போட்டியில் விளையாடும் சென்னை அணிக்கு பெரிய விசில் அடித்தார் நடிகை நயன்தாரா.

தென் தமிழகத்தின் பிரபல நடிகை நயன்தாரா. பல இளம் நெஞ்சங்களில் கனவு தேவதையாக குடிகொண்டிருப்பவர் இவர். ஆனால் இவர் மனதில் குடியிருப்பது என்னவோ அந்த டைரக்டர் தான். நயன்தாரா திரையுலகில் மட்டும் ஆர்வம் இருந்தது கிடையாது. விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதிலும் கிரிக்கெட் என்றால் தனி குஷி.

என்னதான் கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் சென்னையை எவ்வளவு பிடிக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று டுவீட் போட்டு நிரூபித்துள்ளார். மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.

சென்னை மாநகரமே கிரிக்கெட் மேட்ச் பார்க்கத் தொலைக்காட்சியில் மூழ்கியுள்ளது என்று நினைத்தால், அதில் நானும் இருக்கிறேன் என்று கூறுவது போல் உள்ளது நடிகை நயன்தாராவின் டுவீட்.

அவர் பதிவு செய்துள்ள டுவீட்டில், ‘சென்னை அணிக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். சிங்கங்கள் களத்தில் இறங்கி விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ். விசில் போடு.” என்று கூறியுள்ளார். மேட்ச் உடன் சேர்ந்து இன்று நயன்தாராவும் டிரெண்டிங் ஆகிவிடுவார் போல் இருக்கிறது.

×Close
×Close