scorecardresearch

ச்சே… அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு – மனம் திறந்த நயன்தாரா

அதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

nayanthara, நயன்தாரா
nayanthara, நயன்தாரா

Nayanthara: நடிகை நயன்தாரா தனது தமிழ் திரை வாழ்க்கையை ‘ஐயா’ படம் மூலம் தொடங்கினார். உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம் நயன்தாராவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், அதிக ஊதியம் பெறும் நடிகையாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார் நயன்.  அதோடு, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டார். அதே நேரத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ரேடியோ ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் நயன்தாரா, முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தது, தான் செய்த பெரும் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். சித்ரா என்ற தனது பாத்திரம் அசின் நடித்த  கதாநாயகி கதாபாத்திரமான கல்பனாவுக்கு இணையாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக கூறிய நயன்தாரா, படத்தைப் பார்த்தபோது, தான் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara worst role ghajini ar murugadoss