Advertisment

Nayanthara's Airaa: பவானிக்கும் யமுனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஐரா விமர்சனம்

ஹாரர் & த்ரில்லர் களத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்காக முதல் முதலில் நயன் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara's Airaa Review Live updates

Nayanthara's Airaa Review Live updates

Nayanthara's Airaa Review Live Updates: இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ஐரா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

Advertisment

இதில் பவானி, யமுனா என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன். இவருடன் யோகிபாபு, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இதைப் பற்றி சர்ஜூன், “ஹாரர் & த்ரில்லர் களத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்காக முதல் முதலில் நயன் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை, இது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும்” என்றார்.

Live Blog

Nayanthara's Airaa Review Live Updates

நயன்தாராவின் 'ஐரா' விமர்சனம் லைவ் அப்டேட்ஸ்



























Highlights

    12:03 (IST)28 Mar 2019

    ஐராவைப் பற்றி சர்ஜூன்

    ”முதன் முதலில் இரு வேடங்களில் நயன்தாரா நடித்திருக்கும் படம். ஆனால் இரண்டு கேரக்டர்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை.  ரசிகர்களுக்கு ஐரா ஒரு புது அனுபவத்தைத் தரும்” என இயக்குநர் சர்ஜூன் பிரஸ்மீட்டில் தெரிவித்திருந்தார்.

    11:36 (IST)28 Mar 2019

    என் வாழ்க்கையில் ஐரா

    இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள, நடிகர் கலையரசன், ”என்னைப் பார்ப்பவர்களெல்லாம் ஏம் ‘மெட்ராஸ்’ படம் போலுள்ள கதைகளில் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். சர்ஜூனும் நானும் ’எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தில் வேலை செய்தோம். ஐரா என்னுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமானப் படம். இது வெறும் ஹாரர் படம் மட்டுமில்லை, இதில் உணர்வுப்பூர்வமான விஷயங்களும் உள்ளன” என பிரஸ்மீட்டில் தெரிவித்திருந்தார். 

    11:01 (IST)28 Mar 2019

    வெளிநாடுகளில் ஐரா

    ஐரா திரைப்படம் நேற்றே அமெரிக்கா மற்றும் கனடாவில் ரிலீஸாகிவிட்டதாகவும்,  சிங்கப்பூர், லண்டன், இலங்கை,  ஆஸ்திரேலியா,  ஹாங்காங், ஐரோப்பா, துபாய்  ஆகிய நாடுகளில் இன்று வெளியாகியிருப்பதாகவும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது.  

    10:34 (IST)28 Mar 2019

    ஐரா எழுத்தாளர் பிரியங்கா ரவீந்திரன்

    ஐரா திரைப்படத்தின் எழுத்தாளர் பிரியங்கா ரவீந்திரன் , ”சீன் - 1, எக்ஸ்டீரியர் , ரோடு என்பது முதல் இன்று முதல் திரையரங்குகளில் என்பது வரை ஐரா பயணம் ஓர் அழகான வலி” என்று தெரிவித்துள்ளார். 

    10:15 (IST)28 Mar 2019

    இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் வாழ்த்து

    ஐரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். 

    09:55 (IST)28 Mar 2019

    கலையரசன் நன்றி

    ஐரா படத்தில் நடித்த நடிகர் கலையரசன், நயன்தாராவுக்கும் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அதோடு ரசிகர்கள் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்து தங்களுக்கு ஆதரவளிக்கும்படியும்  கேட்டுக் கொண்டுள்ளார். 

    09:48 (IST)28 Mar 2019

    ஐராவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ”கே.ஜே.ஆர் ஸ்டூடியோவுக்கு மற்றுமொரு ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகட்டும். ’ஐரா’வின் மொத்த குழுவினருக்கும், இன்ஸ்பிரேஷனான நயன்தாராவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தியேட்டரில் மட்டும் பாருங்கள்” என ட்வீட்டியுள்ளார். 

    09:35 (IST)28 Mar 2019

    1400 திரையரங்குகள்

    நயன்தாரா நடித்திருக்கும் ‘ஐரா’ இன்று உலகம் முழுவதும் 1400 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

    09:27 (IST)28 Mar 2019

    உணர்வுப்பூர்வமான ஹாரர் படம்

    பத்திரிக்கையாளர் ஹரிச்சரண் புடிபேடி, “இந்த உணர்வுப் பூர்வமான ஹாரர் படத்தில், யமுனா, பவானி என்ற வலிமையான கதாபாத்திரங்களில் நயன்தாரா சிறப்பாக நடித்திருக்கிறார்” என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

    இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ஐரா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. முதன் முதலில் நயன் இரு வேடங்களில் நடித்திருப்பதால் ஐரா மேல் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
    Tamil Cinema Nayanthara
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment