நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்தப் படம், டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, டிசம்பர் 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்கு வந்தது.
இந்தப் படத்துக்கு எதிராக இந்து ஐடி பிரிவு நிறுவனர் ரமேஷ் சோலங்கி, “அன்னபூரணி படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் அளித்திருந்தார்.
மேலும், நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய், எழுத்தாளர்-இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் ஜதின் சேத்தி, ஆர் ரவீந்திரன் மற்றும் புனித் கோயங்கா, ஜீ ஸ்டுடியோவின் தலைமை வணிக அதிகாரி ஷாரிக் படேல் மற்றும் நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் தலைவர் மோனிகா ஷெர்கில் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை கோரியுள்ளார். இந்த நிலையில் அன்னபூரணி படத்தை நெட்பிளிக்ஸ் தளம் நீக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“