/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-17T151841.869.jpg)
nayanthara, vignesh shivan, marriage, astrologer balaji hassan, cricket, darbar, bigil, நயன்தாரா, விக்னேஷ் சிவன், திருமணம், ஜோதிடர் பாலாஜி ஹாசன், கிரிக்கெட், தர்பார், பிகில்
இன்றைய நவநாகரீக இளைஞர்களின் கனவுக்கன்னியான நடிகை நயன்தாராவுக்கு இந்தாண்டிற்குள்ளாக திருமணம் நடைபெறும் என்ற தகவல், நயன்தாரா ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்த செய்தியை படிப்பவர்களின் மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ் சினிமா கதாநாயகிகளிலேயே, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான அதிக படங்களில் நடித்தவர் நடிகை நயன்தாரா தான். ஹீரோவை சுற்றி வரும் கேரக்டர்களில் மட்டும் நடிக்காமல், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அதேசமயம் சமூக சிந்தனை கொண்ட படங்களிலும் நயன்தாரா அதிகளவில் நடித்து வருகிறார். கமர்சியல் படங்கள், ஹீரோயின் ஓரியண்டட் படங்கள் என இருபடங்களையும் சமஅளவில் பேலன்ஸ் செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
நயன்தாராவிற்கு, இந்த ஆண்டிற்குள்ளாக திருமணம் நடைபெறும் என்று திடீர் என்று பிரபலமான ஜோதிடர் பாலாஜிஹாசன் தெரிவித்துள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை மீண்டும் வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு முன்பே, இந்தியா கோப்பையை வெல்லாது. தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் வெல்வார் என்று கூறியவர் பாலாஜிஹாசன். அவர் கூறியதுபோன்றே நடந்தேறியும் விட்டது.
நயன்தாரா, இயக்குனர், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் உடன் சில ஆண்டுகளாக நட்பில் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்குள்ளாக ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வந்ததுண்டு. ஆனால், இதுவரை அவர்கள் உறுதி செய்யவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவருக்கிடையே , திருமணம் இந்தாண்டிற்குள்ளாக நடைபெறும் என்று ஜோதிடர் பாலாஜிஹாசன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில், விரைவில் கொலையுதிர் காலம், சைரா, தர்பார், பிகில் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.