/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-04T170600.822.jpg)
actress Nayanthra mookuthi amman stills, mookuthi amman movie stills, moookuthi amman movie photos, நடிகை நயன்தாரா, மூக்குத்தி அம்மன், நயன்தாரா மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள், விமர்சனம், ரசிகர்கள் பாராட்டு, Nayanthara acting moookuthi amman, mookuthi amman released, Nayanthara fans prize mookuthi amman photos, netizens reactions on mookuthi amman,tamil trending news, tamil cinema news, latest tamil cinema news, latest trending news
Nayanthara Mookuthi Amman Stills: நடிகை நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நயன்தாரா மூக்குத்தியம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை சிலர் விமர்சிப்பதால், அவருடைய ரசிகர்கள் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பதை விமர்சிப்பதா என்று கொந்தளித்து வருகின்றனர்.
நடிகர் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து மூக்குத்தியம்மன் திரைப்படத்தை இயக்கியுள்ளனர். மூக்குத்தியம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த அம்மன் படமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். இந்த படம் முழுக்க மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நடிகை நயன்தாராவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கேரளாவில் உள்ள அம்மன் கோயில்கள், தமிழத்தில் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டார்.
ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாராவுடன், நடிகை ஊர்வசி, மௌலி ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தை மே 1-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொது முடக்கத்தால் திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ் அண்ட் செகண்ட் லுக் போஸ்டர்களும் மூக்குத்தி அம்மன் படத்தின் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நயன்தாராவின் மூக்குத்தியம்மன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
#MookuthiAmman - Working stills !!! ???? pic.twitter.com/zcMSp9wH2d
— RJ Balaji (@RJ_Balaji) June 4, 2020
இந்த படத்திற்கு கதை திரைகதை வசனம் எழுதி இணைந்து இயக்கியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடித்திருப்பது குறித்து ரசிகர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
We Are Madly Waiting For The #TrailerUpdate#MookuthiAmman#LadySuperStar#Nayanthara@RJ_Balaji
— Nanthu K (@Nayantharaa_Fb) June 4, 2020
சிலர் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களைப் பார்க்கும் ரசிகர்கள், நயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா என்று டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
Nayanthara acted in all
sorts of roles!! ????#MookuthiAmman#Nayantharapic.twitter.com/5nVpN131YC
— ♛கயல்♛ (@its_kayal) June 4, 2020
Can't take my eyes off This Miraculous Look ????#MookuthiAmman#Nayantharapic.twitter.com/nV1hgcIbgh
— Priya Singh (@FicklePriya) June 4, 2020
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.