/tamil-ie/media/media_files/uploads/2018/01/a35.jpg)
இன்றைய தமிழ் சினிமாவில் 'வுமன் சூப்பர்ஸ்டார்' என்றால் அது நயன்தாரா தான். அவர் ஒரு படம் நடிக்கிறார் என்றால், அதன் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்கிறது. இவையெல்லாம் மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே நடக்கும் விஷயம். ஆனால், ஒரு நடிகையாக இருந்து கொண்டு நயன்தாரா இதை சாதித்து இருப்பது சாதாரண விஷயமல்ல.
கவர்ச்சி என்பதையெல்லாம் தாண்டி, நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி விட்டார் நயன். வயதானாலும் மெருகேறும் அவரது அழகும், நடிப்புமே இந்த அந்தஸ்திற்கு காரணம். படத்தில் அவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தால், அது அப்படத்திற்கே மைனஸாகி விடுகிறது.
இந்த வருடம் அவர் நடித்து வெளியான 'அறம்' படம் அவரது இமேஜை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தியது. ரசிகர்களைத் தாண்டி சில அரசியல் தலைவர்களும் நயன்தாராவை பாராட்டினர். இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நயன்தாரா தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும். உங்களால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். உங்கள் அனைவரது உள்ளத்தில் எனக்கும் ஒரு சிறு இடம் அளித்ததற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
#LadySuperstar#Nayanthara sends her New Year wish and a lovely Thank You note to her fans and Media friends ????????. Wonderful gesture❤️ we all love u #Nayan Keep good work going and have another blessed year ???? pic.twitter.com/WgOGhBtEav
— sridevi sreedhar (@sridevisreedhar) 1 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.