/tamil-ie/media/media_files/uploads/2019/11/naz1.jpg)
nazriya nazim, malayalam, actress, neram, raja rani, nayanthra, arya, nivin pauly, fahad fazil, trance, new look, fans, நஸ்ரியா நசீம், மலையாளம், நடிகை, தமிழ், நேரம், ராஜா ராணி, நயன்தாரா, ஆர்யா, பஹத் பாசில், புது லுக், ரசிகர்கள்
நடிகை நஸ்ரியாவின் புதுப்பட போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இது நம்ம நஸ்ரியாவா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நஸ்ரியா என்ற பெயரை கேட்டதுமே, இளைஞர்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சினது போன்ற உணர்வு ஏற்படும். அந்தளவிற்கு இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம்.
நேரம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள போதிலும் தமிழக இளைஞர்களின் இப்போதைய நிலையிலும் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை நஸ்ரியா நசீம்.
2014ம் ஆண்டில் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இல்லற வாழ்வில் நுழைந்தநிலையில், நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கினார் நஸ்ரியா. இந்த நிலையில் அடுத்ததாக ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தில் நிலையில் இருக்கிறார் நஸ்ரியா. அன்வர் ரஷீத் என்பவர் இயக்கும் இந்த படத்தில் நஸ்ரியாவிற்கு ஜோடியாக அவரது கணவர் பஹத் பாசில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் நடிகை நஸ்ரியா குட்டையான பாவாடை அணிந்து வாயில் தம்முடன் இருக்கும் கோலத்தைக் அணிந்து ரசிகர்கள் மிகவும் அடைந்துள்ளார்கள். நஸ்ரியா மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதால் விரைவில் தமிழிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அஜித்தின் 59வது படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாகவும் சில செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.