சாய்னா பற்றி சர்ச்சை ட்வீட்… நடிகர் சித்தார்த்துக்கு மகளிர் ஆணையம் எதிர்ப்பு!

சர்ச்சை ட்வீட் குறித்து விளக்கமளித்த நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலைக் குறிப்பிட்டு ‘அவமரியாதைக்குரிய எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

NCW has demanded action against actor Siddharth for his controversial tweet

பேட்மிட்டன் சாம்பியன் சாய்னா நேவாலைப் பற்றி, சர்ச்சைக்குரிய ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

சித்தார்த்தைப் பற்றி ட்விட்டரில் எழுதிய ஷர்மா, “இந்த மனிதனுக்கு ஒரு பாடம் தேவை. இந்த நபரின் கணக்கு ஏன் இன்னும் உள்ளது என்று ட்வீட்டர் இந்தியாவுக்கு கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து சாய்னா ட்வீட் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ”தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்” என்று  குறிப்பிட்டிருந்தார்.

இதை கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த், சாய்னா ட்வீட்டை ரிட்வீட் செய்து, உலகின் பலவீனமான சேவல் சாம்பியன்.. கடவுளுக்கு நன்றி, இந்தியாவின் பாதுகாவலர்கள் எங்களிடம் உள்ளனர். ஷேம் ஆன் யூ என்று எழுதினார்

சித்தார்த்தின் இந்த ட்வீட் ஆன்லைனில் சூடுபிடித்தபோது, ​​ பாடகி சின்மயி ஸ்ரீபிரதாவும் சித்தார்த்துக்கு எதிராக குரல் கொடுத்தார். இதுகுறித்து அவர் எழுதிய ட்வீட்டில்,”இது உண்மையில் மற்றவர் உணர்ச்சிகளைப்பற்றிக் கவலைப்படாத ஒரு பதிவு சித்தார்த். எங்களில் பல பெண்கள் எதற்கு எதிராக போராடுகிறார்களோ, அதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டார்.

இப்படி சித்தார்த் ட்வீட், சோஷியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியதால், மீண்டும் அவர், தன்னை தெளிவுப்படுத்தும் விதமாக மற்றொரு ட்வீட் பதிவிட்டார். அதில், இது சேவல், காளையை பற்றிய ஒரு பழமையான நம்பமுடியாத கதை. அதைத் தான் நான் உதாரணமாக கூறினேன். எனது ட்வீட் மூர்க்கத்தனமான அல்லது புண்படுத்தும் எதையும் குறிக்கவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் சித்தார்த்தின் சர்ச்சை ட்வீட் குறித்து, பிடிஐ-யிடம் பேசிய சாய்னா, “ஆம், சித்தார்த் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரை ஒரு நடிகராக விரும்பினேன். ஆனால் அவர் இப்படி செய்வது நன்றாக இல்லை. இது ட்விட்டர் இதுபோன்ற வார்த்தைகள் மற்றும் கருத்துகளால் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஒரு பிரச்சினை என்றால், நாட்டில் எது பாதுகாப்பானது என்று எனக்குத் தெரியவில்லை என்று சாய்னா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ncw has demanded action against actor siddharth for his controversial tweet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express