5 மாத பிரக்னன்ட்… தைரியமான முடிவு… பாராட்டு மழையில் நீலிமா
neelima esai lateste tamil news: தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நடிகை நீலிமா ராணி கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Neelima Rani Tamil News: 2000ம் ஆண்டுகளில் சின்னத்திரை ராணியாக வலம் வந்தவர் நீலிமா. இவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என அனைத்து சீரியல்களும் இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. இதற்கிடையில், வெள்ளித்திரையிலும் தோன்றிய இவர் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
தற்போது சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ள நீலிமா, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கோவிட் தடுப்பூசி கர்ப்பிணி பெண்கள் போடலாம் என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நீலிமா. இணைய பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், "மூணு மாசம் இருக்கும் போதே கர்ப்பிணிப் பெண்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று சொன்னார்கள். முதலில் நான் பயந்தேன். நிறைய குழப்பத்தில் இருந்தேன். பின் நான் எனக்கு தெரிந்த மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டேன். என்னுடைய குடும்பமும் எனக்கு புரிய வைத்தார்கள்.
இப்போது நான் ஐந்தாவது மாதத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஊசி போட்டு நான் நல்லாத்தான் இருக்கேன். தயவு செய்து கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தையின் நலத்திற்கும் மிக முக்கியம். அதனால் தான் நான் இந்த விஷயத்தை ஷேர் பண்ணேன்" என்று கூறி பதிவிட்டுள்ளார்.
தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ் மழை பொழியப்பட்டு வரும் இந்த வீடியோவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் இந்த துணிச்சலான முடிவை பாராட்டியும் உள்ளனர்.
நடிகை நீலிமா ராணி தனது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022ல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.