குடும்பமாக வந்து அறிவித்த நீலிமா ராணி… திருமண நாளில் எவ்ளோ பெரிய சந்தோஷச் செய்தி?!
Popular tv serial actress Neelima Rani announces her second child pregnancy via insta Tamil News: சின்னத்திரை பிரபலமான நீலிமா ராணி, தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அவரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவில் அறிவித்துள்ளார்.
Neelima Rani Tamil News: சின்னத்திரையில் 2000ம் ஆண்டுகளில் ராணியாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார்.
Advertisment
சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர் தற்போது, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், தனது திருமண நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நீலிமா ராணி. அந்த பதிவு மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், “இனிய ஆண்டுவிழா! இதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், ஜனவரியில் நாங்கள் நான்கு நபர்களாக ஆக போகிறோம். இன்னும் 20 வாரங்கள் தான் உள்ளது!!! எங்களுக்கு மகிழ்ச்சி!" என்று குறிப்பிட்டுள்ளார்.