13 ஆண்டு திருமண வாழ்க்கை; 2-வது குழந்தை: உற்சாகத்தில் சீரியல் நடிகை நீலிமா
Popular tv serial actress Neelima Rani shares insta post that she’s blessed with a baby girl Tamil News: நடிகை நீலிமா ராணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
Neelima Rani Tamil News: சின்னத்திரையில் 2000ம் ஆண்டுகளில் ராணியாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி. இவர் 'தேவர் மகன்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Advertisment
சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை நீலிமா கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 4ல் இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி சமீபத்தில் தங்களது 13 வருட திருமண வாழ்க்கையை கொண்டாடினார்கள். மேலும், இந்த தம்பதிக்கு அதிதி என்ற மகளும் உள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், நடிகை நீலிமா ராணி தனது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022ல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 5ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள நீலிமா, அந்த தகவலை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.